Saturday, April 18, 2009
ஒரு நாள் விடியும் இருளும் முடியும்
தந்திரோபாய பின்னகர்வு என கூறிக்கொண்டு தமிழ் ஈழம் என அழைக்கப்பட்ட பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள விடுதலைப்புலிகள் இன்றைய நாளளவில் இராணுவ ரீதியாக ஒரு பாரிய பின்னடைவை அடைந்துள்ளனர் புலிகளுக்கு ஆதரவான இணைய தளங்கள் எழுத்தாளர்கள் எதுவித புதிய ஆக்கங்களையும் பிரசுரிக்காமல் கணப் படுவது பார்வையாளர்களாகிய என் போன்றவர்களுக்கு இந்த யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே உணர்த்துகிறது மாவிலாற்றில் தொடங்கிய இந்த இறுதிப் போரில் எஞ்சியுள்ள முப்பது வீத தமிழ் ஈழ பகுதியையும் மீட்டெடுத்து அடுத்தடுத்த வருடங்களில் தனி தமிழ் ஈழத்தை நிலை நிறுத்துவர் எனவே பெரும்மாலான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களின் ஆருடமாகவும் இருந்தது.அனால் இந்த ஆருடங்கள் எதிர்பார்ப்புக்களை மஹிந்த அரசாங்கம் அதனுடன் இணைந்த சர்வதேசமும் சுக்கு நூறாக உடைத்து எறிந்துள்ளது.மாவிலாறு தொடங்கி இறுதியாக நடைபெற்ற விமானத் தாக்குதல் ஈறாக அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்கும் தோல்வியிலேயே முடிந்துள்ளன இது யாராலும் மறுக்கப் பட முடியாத நிதர்சனமான உண்மையாகும்.வன்னிப் பேரு நிலப் பரப்பில் காலடி எடுத்து வைக்கும் ஒவொரு இராணுவ வீரனும் உயிருடன் திரும்ப முடியாது என்று கூறியவர்கள் இன்று உயிருடன் இல்லை இந்த இரண்டு பாரிய இராணுவ அமைப்புக்களின் தாக்குதலினால் பாதிக்கப் படுபவர்கள் யார்?சிறுவர்கள் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் இன்று நாட்டின் அபிவிருத்திக்காக பயன்பட வேண்டிய பெருந்தொகையான பணம் யுத்த ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு முதலிடப் படுகிறது அப்பாவி சிங்கள தமிழ் இளையோர் களப் பலியாகின்றனர் இவ்வாறன பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் அந்த தனி தமிழ் ஈழம் எமக்கு கட்டாயம் தேவை தானா???கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இல்லையா??ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் என்னிடம் நண்பன் ஒருவன் கேட்ட கேள்வி "தமிழ் சனங்களுக்கு (வடக்கில் வாழும்) சமாதானத்தை ஏற்படுத்தி செல் போன் எல்லாம் குடுத்து அவங்கள சந்தோசப் படுத்தினத்துக்கு மிகச் சிறந்த ஒரு முடிவை எடுத்துட்டாங்க"இன்று வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழர்களில் எதனை பேர் இங்கு வந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக விடுதலை புலிகளுடன் சேர்ந்து போராட தயாராக உள்ளனர்???அல்லது அவர்களில் எதனை பேர்தான் இலங்கையில் சமாதனம் ஏற்பட்ட பின்னர் அங்கு சென்று மீண்டும் குடியேற தயாராக உள்ளனர் வெறும் வாய்ச்சொல்லில் வீரர்கள் அங்கு காணப்படும் சொகுசுகளை அனுபவித்து விட்டு மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பர்.இலங்கை மூவின மக்களும் வாழும் ஒரு அமைதியான தீவு ஆகும் சில சுயநலவாத குள்ள நரிகள் சாக்கடை அரசியல்வாதிகள் தமது சுயநலத்துக்காக தமது வாழ்வு வளம் பெறுவதற்காக தமது பெயர் வரலாற்றில் இடம்பெருவதட்காக இந்த போராட்டங்களை மேட்கொள்கிறனர்.ஒருநாள் இவை யாவும் முடியும் புதிய விடியலும் பிறக்கும்
Subscribe to:
Posts (Atom)