Sunday, February 15, 2009

நடைபெறுமா???

இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வை எடுத்துக்கொண்டால் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிகரமான நாட்களை விட துயரம் படிந்த நாட்களே அதிகம் இந்த அவர்களது இந்த இருண்ட கருப்பு சரித்திரத்திற்கு வழி கோலியது என்ன இலங்கை நாட்டை பொறுத்த வரையில் அது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஓர் சிறிய தீவு நிலையில்லாத அற்ப மரியதைகளுக்காகவும் மனிதன் வெறித்தனமான ஓநாய்களை விட கேவலமாக நடந்துகொண்டு தாங்கள் மாய்ந்து மட்டுமல்லாது தனது சந்ததியினரிடத்தும் அந்த வெறியை விதைத்து விட்டு செல்கின்றனர் தென் இலங்கையை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவும் பயங்கர்வாதிகளாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.தமிழர் மீதான இந்த இனவெறி மற்றும் இன அழிப்பு எடட்காக மேட்கொள்ளப்படுகிறது இந்த் இன அழிப்பிற்கு காரணம் தான் என்ன தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள்தனா கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெறும் யுத்தம் எப்போதுதான் முடியும் தமிழ் மக்கள் காலம்காலமாக சந்தித்து வரும் துரோகங்களுக்கு என்று ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்?என்று தான் வெடியோசைகள் குழல் ஓசைகளாக மாறும்என்றுதான் அரசியல் படு கொலைகள் நிறுத்தப்படும் என்றுதான் ஊடக சுதந்திரம் மதிக்கப்படும்.

Wednesday, February 11, 2009

மரபு

அண்டங்கள் தோன்றி அகிலம் படைக்கப்பட்ட காலம் தொட்டு எம் மொழியாம் செம் மொழி தமிழ் மொழி வழக்கிலிருந்து வருகிறது. உலகிலுள்ள பழைமையான மொழிகளில் எம் மொழியும் உண்டு என்பது தமிழர் ஆகிய நாம் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

மொழியின் பழமையை கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி என பலர் கூற கேட்டுள்ளோம். அவ்வகையில் தமிழர் தோன்றிய காலம் முதல் கவிதைகளும் புனையப்பட்டு வருகின்றன.

உயிரெழுத்து மெய் எழுத்திணைந்து உயிர் மெய் எழுத்து தோன்றி அவை சொற்களாகி சொற்கள் வசனங்களாகி வசனங்கள் வரலாறகி உள்ளன.இலக்கணங்கள் வகுக்கப்பட்டு அவ் வழி ஒழுகி இலக்கியங்கள் உருவாகின.கவிதைகள் பல மடைதிறந்த வெள்ளம் போல் எழுத்தாணிகள் ஊடே உலகிற்கு வழங்கப்பட்டன.

வெண்பாக்களும் கவிகளும் சாமானியர்களால் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத பல சொற்களை தம்மகத்தே கொண்டிருந்தன.கடும் தமிழ் சொற்கள் கொண்டு உருவாகிய அக் கவிதைகள் மிகவும் கருத்தாளம் மிக்கதாய் அமைந்திருந்தது.கவிகள் மன்னனின் தயவிலோ அல்லது பிரமுகர்களின் தயவில் வாழ்ந்த படியால் அவர்களின் புகழ் பாடுவனவாயும் அமைந்தன.

Tuesday, February 10, 2009

முதல் பதிவு

கருணைக் கணபதி
காலடி போற்றி
காலனை வென்று
காலத்தை வென்று
கருத்தினை வென்று
கணமும்-உன்
தாழ் பணிந்து
அன்னை தமிழே
நின் புகழ் பாட
எனக்கோர்
வழி சொல்வாய்
வலிகள் மறந்து-புது
வாழ்க்கை தொடங்க
தயை கூர்வாய்

எழுத்தில் பிழை உண்டு
நானறிவேன்
எழுதிட ஆர்வமும் உண்டு
மடல் காணும் அன்பர்கள்
மனம் கனிந்து
என் பிழைபொறுத்து
கன்னியாய் தொடங்கிய
இம்முயற்சி
முற்றுப்புள்ளியாய்அமையாமல்
தொடர் குறியாய்
அமைய
அருள்வீர் !!!