அண்டங்கள் தோன்றி அகிலம் படைக்கப்பட்ட காலம் தொட்டு எம் மொழியாம் செம் மொழி தமிழ் மொழி வழக்கிலிருந்து வருகிறது. உலகிலுள்ள பழைமையான மொழிகளில் எம் மொழியும் உண்டு என்பது தமிழர் ஆகிய நாம் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.
மொழியின் பழமையை கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி என பலர் கூற கேட்டுள்ளோம். அவ்வகையில் தமிழர் தோன்றிய காலம் முதல் கவிதைகளும் புனையப்பட்டு வருகின்றன.
உயிரெழுத்து மெய் எழுத்திணைந்து உயிர் மெய் எழுத்து தோன்றி அவை சொற்களாகி சொற்கள் வசனங்களாகி வசனங்கள் வரலாறகி உள்ளன.இலக்கணங்கள் வகுக்கப்பட்டு அவ் வழி ஒழுகி இலக்கியங்கள் உருவாகின.கவிதைகள் பல மடைதிறந்த வெள்ளம் போல் எழுத்தாணிகள் ஊடே உலகிற்கு வழங்கப்பட்டன.
வெண்பாக்களும் கவிகளும் சாமானியர்களால் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத பல சொற்களை தம்மகத்தே கொண்டிருந்தன.கடும் தமிழ் சொற்கள் கொண்டு உருவாகிய அக் கவிதைகள் மிகவும் கருத்தாளம் மிக்கதாய் அமைந்திருந்தது.கவிகள் மன்னனின் தயவிலோ அல்லது பிரமுகர்களின் தயவில் வாழ்ந்த படியால் அவர்களின் புகழ் பாடுவனவாயும் அமைந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஓலத்தாரே...
நல்லா எழுதுறீங்க...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்...
Post a Comment