Friday, May 15, 2009

சர்வம்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான ஆண்டு யாவரும் நலம் பொம்மலாட்டம் பசங்க போன்ற திரைப்படங்களின் வரவு ஒரு மிகுந்த ஆரோக்கியமான விடையமாக அமைந்துள்ளது.என்ன ஒரு சிக்கல் இல்லாத கதையையும் சிறந்த திரைக்கதை மூலம் நூறு நாட்கள் ஓடக்கூடிய சிறந்த திரைப்படமாக உருவாக்கும் அந்த சிருஷ்ட்டி சக்தி ஒரு சில இயக்குனர்களுக்கே அமைந்துள்ளது.அவ்வகை சக்தி வைக்கப் பெற்ற இயக்குனர்களின் ஒருவர் விஷ்ணு வர்த்தன்.அறிந்தும் அறியாமலும்,பட்டியல் பில்லா வரிசையில் அடுத்த படம் சர்வம்.நான் கடவுளில் அகோரியாக வந்த அந்த கோரமான ஆர்யாவா இவர் நம்பவே முடியல்ல ரொம்பவே ஸ்மார்ட் ஆகவும் ஹண்ட்சம் ஆகவும் இருக்கிறார் திர்ஷா ஒரு டாக்டராக ஒரு அழகுப் பதுமையாக இருக்கிறார். வில்லன் அவரது நாய் பார்வையாலேயே மிரட்டுகின்றனர் நன்றாகவும் நடிக்கவும் செய்துள்ளனர். பஞ்ச் டயலாக் இல்லை பாய்ந்து அடிக்கும் அந்த சுப்பர் ஹீரோ பவர் இல்லை மொக்கைத்தனமான காமெடிக் காட்சிகள் இல்லை, அரைகுறை ஆடையில் ஆடும் ஐடெம் சாங்களும் இல்லை. இவை எல்லாம் இருந்தும் கொடுக்க கூடிய விறுவிறுப்பை விட ஆயிரம் மடங்கு விறுவிறுப்பை கொடுக்கக்கூடிய திரைப்படம் முதல் பாதி ஒரு கவிதை!!அலை பாயுதேயிட்கு பின்னர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள காதல் காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் இதமாக அமைந்துள்ளன பின்னணியில் வரும் இளையராஜாவின் அந்த வயலின் இசை நெஞ்சுக்குள் இருந்து பட்டம் பூச்சி பறப்பது. திர்ஷா வரும் காட்சிகளில் அதே இசையை ராக் ஸ்டைல்லில் மாற்றி யுவன் பின்னி எடுத்துள்ளார்!இழப்புக்களால் பாதிக்கப் பட்ட இருவர் அந்த இழப்புக்களின் பின்னர் எவ்வாறு வாழ்கின்றனர் அந்த இழப்புக்களை அவர்கள் எவாறு ஏற்றுக் கொள்கின்றனர் என்பதே படத்தின் ஒரு வரிக்க்கதை!!

மனைவி குழந்தையின் சாவிற்கு பழி வாங்கத்துடிக்கும் ஒருவன், எதிரியிடமிருந்து தன் குழந்தையை காப்பற்றதுடிக்கும் ஒரு தந்தை இறந்த தனது காதலியின் இதயத்தை சுமக்கும் குழந்தையை தன் காதலியாகவே பாவித்து அன்பு செலுத்தும் காதலன் என இந்த மூன்று முக்கிய கதா பதிரங்களுக்குள்லேயே கதை நகர்கிறது காட்சிகளின் வேகத்துக்கு கமராவும் நகர்கிறது!!
கட்டாயம் நல்ல தட்ஸ் ஒலி நயமுள்ள திரையரங்கில் பார்க்கவேண்டிய படம்

Thursday, May 7, 2009

கன்னத்தில் முத்தமிட்டால்

ஈழத்தமிழர் வாழ்வை சித்தரித்து அவர்தம் வாழ்க்கை முறையை முற்றாக எடுத்துக்கட்டும் வண்ணம் வெளியாகிய திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

யதார்த்த சினிமாவை உணர்வு பூர்வமாக செலுலைட்டுக்குள் அடைத்த இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் ஈழத்தமிழர்களின் வாழ்வை சித்தரிப்பதில் நூறு விகிதம் வெற்றியடையாவிட்டாலும் என் மனதிலிருந்து அழிக்கமுடியாத ஒரு இடத்தை

பெறுகிறதுஇந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் கரு ஒரு ஈழத்தமிழ் எழுத்தளரிடமிருந்து உருவாகியது என்றும் ஒரு தரப்பினர் கூறக் கேட்டிருக்கிறேன் அந்த சிறுகதையையும் வாசித்தும் உள்ளேன் அந்த சிறிய கருவிலிருந்து இவ்வளவு சிறந்த ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது என்பதனை நினைக்கும்போது இயக்குனர் அவர்கள் என் மனதினில் எட்டமுடியாத உயரத்தில் சிம்மாசனமிட்டு அமர்கிறார்.

படத்தின் நாயகர்கள் பலர், வசனகர்த்தா சுஜாதா ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், இசைப்புயல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மான்.ஒரு மழைக்கால மாலை நேரத்தில் ஒலிக்கும் இளயராஜா மேலோடி மாதிரி படம் நகர்கிறது. வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் என்று ஈழத்தமிழர் கல்யாண வீட்டில் ஆரம்பிக்கும் திரைப்படம் மிருதுவான ஆனால் சலிப்பு ஏற்படுத்தாத திரைக்கதையுடன் ஒரு கவிதை போல் நகர்கிறது.பாத்திரப் படைப்புக்கள், நடிகர்களை கதாபாத்திரங்களாக வாழ வைப்பதில் மணிரத்னத்துக்கு நிகர் வேறு யாரும் இல்லை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தையாக, ஒரு பொறியியலாளராக ஒரு எழுத்தாளராக மாதவனை நான் இதுகாறும் உருவகப் படுத்தியது இல்லை. சிக்கன உடையில் பலர் கனவை கொள்ளைகொண்ட சிம்ரனையும் அழுக்கு புடவையுடன் மூன்று குழந்தைகளின் தாயாக அப்பாப்பா என்ன அருமையான பாத்திரப் படைப்புக்கள் கீர்த்தனாவின் நடிப்பை பாராட்டி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லாத படியால் மற்ற கதாபாத்திரங்களான சாமா டாக்டர் விக்கிரம சாமாவின் தமையனார் போன்ற கதாபாத்திரங்களை நோக்கலாம்.இதுகாறும் சிங்கள தொலைகாட்சி நாடகங்களில் கொடுரமானவர்களாகவும் காமுகர்களாகவும் சித்தரித்து நடிக்கப்பட்டு வந்த விடுதலைப் புலி உறுப்பினர் காதபதிரத்தை பார்த்து மனம் வெதும்பிய என்னை பசுபதியின் பாத்திரப் படைப்பும் அவரது நடிப்பும் அவர் கதைக்கும் எமது தமிழும் என்னை மிகவும் பாதித்தது.பிரகாஷ் ராஜ் டாக்டர் விக்ரமவாக பின்னி எடுத்திருப்பார்.எமது வாழ்வில் நாம் தினம் கண்டு அனுபவிக்கும் குடிப்பெயர்வையும் புலம்பெயர்வையும் விடைகொடு எந்தன் நாடே என்ற பின்னணி இசையுடன் திரையில் காணும் போது எனை அறியாமலே இரு கண்ணீர்த் துளிகள் திரண்டு மண்ணுடன் கலக்கின்றன.மாதவன் சிம்ரனின் காதல் ஒரு அஜந்தா ஓவியம் வியாபர ரீதியாக வெற்றியடையாவிட்டலும், வியாபார ரீதியில் பெருவெற்றி அடைந்த சில குப்பை மசாலா திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது இந்த மாதிரி படம் எல்லாம் ஒடைலையே என்று நினைக்கும்போது அடிமனதில் ஒரு சொல்லமுடியாத வலி உண்டாகிறது!!!

Wednesday, May 6, 2009

ஈழ வரலாறும் பொன்னியின் செல்வனும்

இன்று நேற்றல்லாது காலம் காலமாக இந்தியாஈழ வரலாற்றிலும் ஈழப் போர்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பங்களிப்புக்களை செய்து வந்துள்ளதுஇதில் சில தமிழருக்கு சாதகமாக இருந்த போதிலும் பல ஈழத் தமிழருக்கு பாதகமாக அமைந்தன என்பது எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும் ஈழத் திருநாட்டையும் தன ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே அன்றும் சரி இன்றும் சரி இந்தியத் தலைமைத்துவம் காய் நகர்த்தி வருகின்றது சிங்களமன்னனுக்கு பாண்டிய நாட்டு மன்னர்கள் படை உதவி செய்வது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.இலங்கைக்கு முதல் முதலாக குடிபெயர்ந்ததாக மகா வம்சம் குறிப்பிடும் விஜயன் மதுரையில் இருந்து பாண்டி நாட்டு இளவரசியை வரவழைத்து திருமணம் முடித்ததாகவும் குறிப்பிடுகின்றது சோழர்கள் பக்கச் சார்பாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வனில் பாண்டிய நாட்டவர்கள் மற்றும் அவர்தம் ஆபத்துதவிகள் ஒரு மறைத் தன்மையாகவே சித்தரிக்கப் பட்டுள்ளனர்.ஈழத்தில் ராஜ ராஜனின் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டனவா இல்லை வழங்கப் பட்டனவா என்பது இன்னும் என் மனதில் தீராத சந்தேகமாகவே உள்ளது !!!தமிழ் மன்னனின் ஆட்சியின் கீழ் எவ்வாறு இன வெறியர்கள் காலம் தள்ளினர் என்பதுவும் விடை காண முடியாத கேள்வியாகவே உள்ளது