Thursday, May 7, 2009

கன்னத்தில் முத்தமிட்டால்

ஈழத்தமிழர் வாழ்வை சித்தரித்து அவர்தம் வாழ்க்கை முறையை முற்றாக எடுத்துக்கட்டும் வண்ணம் வெளியாகிய திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

யதார்த்த சினிமாவை உணர்வு பூர்வமாக செலுலைட்டுக்குள் அடைத்த இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் ஈழத்தமிழர்களின் வாழ்வை சித்தரிப்பதில் நூறு விகிதம் வெற்றியடையாவிட்டாலும் என் மனதிலிருந்து அழிக்கமுடியாத ஒரு இடத்தை

பெறுகிறதுஇந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் கரு ஒரு ஈழத்தமிழ் எழுத்தளரிடமிருந்து உருவாகியது என்றும் ஒரு தரப்பினர் கூறக் கேட்டிருக்கிறேன் அந்த சிறுகதையையும் வாசித்தும் உள்ளேன் அந்த சிறிய கருவிலிருந்து இவ்வளவு சிறந்த ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது என்பதனை நினைக்கும்போது இயக்குனர் அவர்கள் என் மனதினில் எட்டமுடியாத உயரத்தில் சிம்மாசனமிட்டு அமர்கிறார்.

படத்தின் நாயகர்கள் பலர், வசனகர்த்தா சுஜாதா ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், இசைப்புயல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மான்.ஒரு மழைக்கால மாலை நேரத்தில் ஒலிக்கும் இளயராஜா மேலோடி மாதிரி படம் நகர்கிறது. வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் என்று ஈழத்தமிழர் கல்யாண வீட்டில் ஆரம்பிக்கும் திரைப்படம் மிருதுவான ஆனால் சலிப்பு ஏற்படுத்தாத திரைக்கதையுடன் ஒரு கவிதை போல் நகர்கிறது.பாத்திரப் படைப்புக்கள், நடிகர்களை கதாபாத்திரங்களாக வாழ வைப்பதில் மணிரத்னத்துக்கு நிகர் வேறு யாரும் இல்லை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தையாக, ஒரு பொறியியலாளராக ஒரு எழுத்தாளராக மாதவனை நான் இதுகாறும் உருவகப் படுத்தியது இல்லை. சிக்கன உடையில் பலர் கனவை கொள்ளைகொண்ட சிம்ரனையும் அழுக்கு புடவையுடன் மூன்று குழந்தைகளின் தாயாக அப்பாப்பா என்ன அருமையான பாத்திரப் படைப்புக்கள் கீர்த்தனாவின் நடிப்பை பாராட்டி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லாத படியால் மற்ற கதாபாத்திரங்களான சாமா டாக்டர் விக்கிரம சாமாவின் தமையனார் போன்ற கதாபாத்திரங்களை நோக்கலாம்.இதுகாறும் சிங்கள தொலைகாட்சி நாடகங்களில் கொடுரமானவர்களாகவும் காமுகர்களாகவும் சித்தரித்து நடிக்கப்பட்டு வந்த விடுதலைப் புலி உறுப்பினர் காதபதிரத்தை பார்த்து மனம் வெதும்பிய என்னை பசுபதியின் பாத்திரப் படைப்பும் அவரது நடிப்பும் அவர் கதைக்கும் எமது தமிழும் என்னை மிகவும் பாதித்தது.பிரகாஷ் ராஜ் டாக்டர் விக்ரமவாக பின்னி எடுத்திருப்பார்.எமது வாழ்வில் நாம் தினம் கண்டு அனுபவிக்கும் குடிப்பெயர்வையும் புலம்பெயர்வையும் விடைகொடு எந்தன் நாடே என்ற பின்னணி இசையுடன் திரையில் காணும் போது எனை அறியாமலே இரு கண்ணீர்த் துளிகள் திரண்டு மண்ணுடன் கலக்கின்றன.மாதவன் சிம்ரனின் காதல் ஒரு அஜந்தா ஓவியம் வியாபர ரீதியாக வெற்றியடையாவிட்டலும், வியாபார ரீதியில் பெருவெற்றி அடைந்த சில குப்பை மசாலா திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது இந்த மாதிரி படம் எல்லாம் ஒடைலையே என்று நினைக்கும்போது அடிமனதில் ஒரு சொல்லமுடியாத வலி உண்டாகிறது!!!

No comments:

Post a Comment